நோக்கம்

உலகில் எல்லா நாடுகளிலும் அருங்காட்சியகம் உள்ளது அந்த அருங்காட்சியகத்தில் நாட்டின் புராதன சின்னங்களும், தொல்பொருட்களும், ப‌ண்டைய நாகரீகங்களின் எச்சங்களும் காட்சிப்படுத்தப்படும். அவை அந்த நாட்டின் தொன்மையையும் புராதனப் பெருமையையும் பறைசாத்தவும் இளைய தலைமுறை பிற நாட்டவர்க்கு கற்பிக்கவும் எடுத்துரைக்கவும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இந்த வகையில் தமிழ் மொழி உலகின் தொன்மைவாய்ந்த மூத்த மொழி. உலகின் பல மொழிகளுக்கு தாயாகவும் பல நாகரீகங்களுக்கு தோற்றுவாயாகவும் விளங்குவது தமிழ். இந்த மொழியை பாதுகாப்பதும் இத‌ன் தொன்மையையும், வள‌த்தையும் நேர்த்தியையும், அறிவியல் தன்மையையும் உலகிற்கு எடுத்துரைப்பதற்கும் இளைய தலைமுறையினருக்கு கற்பிக்கவும் அருங்காட்சியகம் அமைப்பது அத்தியாவசியமாகின்றது..


எமது பணி

மெய்நிகர் காட்சியகம்

அறிஞர் சந்திப்பு

தமிழ்ச் சாரல்

ஆவண காப்பகம்

த‌மிழை அறிவோம்
த‌மிழால் இணைவோம்

கட்டுரைகள்

எமது தற்போதைய செய்திகள்

செந் தமிழ் அந்தணர், முது முனைவர் இரா.இளங்குமரனார்

நாம் வாழுங் காலத்தின் மாபெரும் தமிழறிஞர், செந்தமிழ் அந்தணர் , முதுமுனைவர்இரா.இளங்குமரனார் யூலை 25ம் திகதியன்று(25-07-2021) மறைந்து விட்டார். மதுரைவாழவந்தாள்புரம் எனும் ஊரில் 1930ம் ஆண்டு (30-01-1930) பிறந்தார். இளம்வயதிலேயே தமிழ் மீதுள்ள பற்றால் தனது வடமொழிப் பெயரான `கிருஸ்ணன்`என்பதனைத் தூய ...

Go To Top